LOADING...
INDvsSA டி20 தொடர்: காயத்தில் இருந்து மீண்ட ஷுப்மன் கில் போட்டியில் பங்கேற்க அனுமதி
INDvsSA டி20 தொடரில் ஷுப்மன் கில் பங்கேற்க அனுமதி

INDvsSA டி20 தொடர்: காயத்தில் இருந்து மீண்ட ஷுப்மன் கில் போட்டியில் பங்கேற்க அனுமதி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 06, 2025
04:19 pm

செய்தி முன்னோட்டம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியிருந்த இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் ஷுப்மன் கில், பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். அவர் தற்போது அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்வீப் ஷாட் விளையாடியபோது கில்லின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இது அவரை எஞ்சிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இருந்து விலக்கியது.

கண்காணிப்பு

மருத்துவ அதிகாரிகள் கண்காணிப்பு

ஷுப்மன் கில்லின் மீட்சியானது தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ அதிகாரிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது. அவர் போட்டி கிரிக்கெட்டுக்குத் திரும்புவதற்கான அனைத்துத் தகுதி மற்றும் செயல்திறன் அளவுகோல்களையும் பூர்த்தி செய்துள்ளார். ஷுப்மன் கில், டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட ஏற்கனவேத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது பங்கேற்பு தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடற்தகுதிச் சான்றிதழைப் பொறுத்தது என்ற நிலையில், தற்போது அவர் அந்த அனுமதியைப் பெற்றுள்ளார். இதனால், எதிர்வரும் டி20 தொடரில் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து ஷுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இல்லாதது டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement