Loading...
சையத் முஷ்டாக் அலி கோப்பை: சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாடும் இந்திய டி20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்
உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை: சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாடும் இந்திய டி20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்

எழுதியவர் Vasuki
Nov 28, 2026
12:12 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர், உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியின் சூப்பர் லீக் சுற்றுக்காக மும்பை அணியில் இணைந்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில், டெஸ்ட் அணியில் இடம்பெறாத ஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக ஒரு சாதாரண வீரராக மட்டுமே களமிறங்குகிறார். மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA) வெள்ளைப்பந்து தொடர்களுக்கான கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்துள்ளதால், இந்திய அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாட உள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் மாற்றத்தின் பின்னணி

நாக்பூரில் நடைபெறவுள்ள மும்பையின் சூப்பர் லீக் ஆட்டங்கள்

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சூர்யகுமார் யாதவை இந்திய டி20 கேப்டன் பதவியிலிருந்து நீக்கி அணியிலிருந்தும் கைவிட்ட பிறகே, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, சையத் முஷ்டாக் அலி தொடரின் எலைட் 'டி' பிரிவில் 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்துத் தோல்வியே சந்திக்காமல் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறியுள்ள மும்பை அணி, நாக்பூரில் நடைபெறும் அடுத்த சுற்றில் நவம்பர் 30-ஆம் தேதி ஆந்திராவையும், டிசம்பர் 2-ல் பஞ்சாபையும், டிசம்பர் 4-ல் ராஜஸ்தானையும் எதிர்கொள்கிறது. தொடரின் இறுதிப்போட்டி டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சூர்யகுமார் யாதவ் உறுதி

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கத் தேர்வுக்குழுவின் கதவைத் தட்டுவேன்

நடப்புத் தொடரில் மும்பை அணிக்காக 214 ரன்கள் குவித்து இரண்டாவது அதிகபட்ச ரன் குவிப்பாளராக உள்ள சூர்யகுமார் யாதவ், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு மீண்டும் இந்திய டி20 அணிக்குத் திரும்பத் தீவிரம் காட்டி வருகிறார்.

2026 டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகும் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் அணியிலிருந்து கைவிடப்பட்டதும் தனக்கு ஏமாற்றம் அளித்ததாகக் கூறிய சூர்யகுமார், அந்த வருத்தத்தையே வெறியாக மாற்றி மீண்டும் நாட்டுக்காக விளையாடத் தேர்வுக்குழுவின் கதவைத் தட்டுவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT