Loading...
வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன்? கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்
வைபவ் சூரியவன்ஷி தொடர்ந்து பெஞ்சில் அமரவைக்கப்பட்டது குறித்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கமளித்துள்ளார்.

வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன்? கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்

எழுதியவர் Vasuki
Oct 18, 2026
01:24 pm

செய்தி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்ஷி ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படாமல் தொடர்ந்து பெஞ்சில் அமரவைக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மனம் திறந்துள்ளார். பெங்களூருவில் மழையால் பாதிக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி கைவிடப்பட்டதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்த நிலையில், போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் இளம் வீரரின் எதிர்காலம் குறித்து அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

வாய்ப்பு மறுப்பு

தொடக்க ஜோடியின் அதிரடி

முன்னதாக ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகக் களமிறங்கியிருந்த வைபவ் சூரியவன்ஷி, இதுவரை விளையாடிய 8 சர்வதேச டி20 போட்டிகளில் 186-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2 அரைசதங்கள் உட்பட 246 ரன்கள் குவித்து அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதும் அனுபவ வீரர்களான சஞ்சு சாம்சன் (168 ரன்கள்) மற்றும் அபிஷேக் சர்மா (145 ரன்கள்) ஜோடி தலா இரண்டு அரைசதங்கள் விளாசி அபாரமான ஃபார்மில் இருந்ததால், அணியின் லெவனில் சூரியவன்ஷிக்கு இடம் கிடைக்காமல் போனது.

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்

பொறுமை காக்குமாறு சூரியவன்ஷிக்கு அறிவுரை

இது குறித்துப் பேசிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், "அணிக்குத் தேர்வாகவில்லையே என்று அதிகமாக யோசிக்காமல், தனது பயிற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு வைபவிடம் கூறி வருகிறேன்".

"முறையான பயிற்சியில் தொடர்ச்சி இருக்கும்போது உங்களுக்கான வாய்ப்புகள் நிச்சயமாகத் தேடி வரும். சில நேரங்களில் நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது".

"தற்போது அணியில் களமிறங்கும் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தொடர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

மேலும் தொடரின் 2 மற்றும் 4-வது போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் 240 ரன்களுக்கும் மேல் விட்டுக்கொடுத்ததைச் சுட்டிக்காட்டிய ஐயர், பேட்டிங் வரிசை அபாரமாகச் செயல்பட்டாலும் பந்துவீச்சுச் செயல்பாட்டில் சரிவு ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டார்.

ADVERTISEMENT