அடுத்த செய்திக் கட்டுரை

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் சாதனை
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 29, 2023
07:17 pm
செய்தி முன்னோட்டம்
சட்டோகிராமில் புதன்கிழமை (மார்ச் 29) அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டிம் சவுத்தி 134 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஷாகிப் அல் ஹசன் 136 விக்கெட்டுகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதற்கிடையே, டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக 450 விக்கெட்டுகளை எட்டிய ஐந்தாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக டுவைன் பிராவோ, ரஷித் கான், சுனில் நரைன் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஷாகிப் அல் ஹசன் சாதனை
All round royalty 👑 #BANvIRE #ShakibAlHasan pic.twitter.com/3XYDKBPM09
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 29, 2023
செய்தி இத்துடன் முடிவடைந்தது