NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
    தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

    கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 08, 2024
    11:34 am

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 8 முதல் 16 வரை 9 நாட்கள் 156 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

    டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழா, டிசம்பர் 13 ஆம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலை 6 மணிக்கு அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பல லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்க திருவண்ணாமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பக்தர்களின் அதிகரிப்பை சமாளிக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (டிஎன்எஸ்டிசி) சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

    பாதுகாப்பு

    திருவிழா பாதுகாப்பு

    திருவிழாவின் போது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்த 16,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக உள்ளன.

    விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு இடமளிக்க பள்ளிகளின் வளாகத்தைப் பயன்படுத்துவதால் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளும் அடங்கும்.

    போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகளுடன், திருவிழா சிறப்பாக நடைபெறுவதை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிகளுக்கு விடுமுறை
    பள்ளிகளுக்கு விடுமுறை
    திருவண்ணாமலை
    கார்த்திகை தீபம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழகத்தின் 36 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை
    சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல் சென்னை
    திருவள்ளூரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  தமிழ்நாடு
    தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழ்நாடு

    பள்ளிகளுக்கு விடுமுறை

    தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து தமிழகம்
    இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  ராணிப்பேட்டை
    பல்வேறு பல்கலைகழகங்களின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு  சென்னை
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண்  தமிழ்நாடு
    தமிழகத்தில் கங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம்  திருவிழா
    தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது  ஜம்மு காஷ்மீர்
    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் - திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் விளக்கம்  ஜம்மு காஷ்மீர்

    கார்த்திகை தீபம்

    திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் திருவண்ணாமலை
    திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் காயம்  திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றம் திருவண்ணாமலை
    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025