LOADING...
"மாதம் ரூ.4 லட்சம் போதாதா?": ஜீவனாம்சம் குறித்து முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹானிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹானிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

"மாதம் ரூ.4 லட்சம் போதாதா?": ஜீவனாம்சம் குறித்து முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹானிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 07, 2025
06:22 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் தாக்கல் செய்த ஜீவனாம்சத் தொகையை அதிகரிக்குமாறு கோரிய மனு மீது, உச்ச நீதிமன்றம் முகமது ஷமிக்கும், மேற்கு வங்க அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொல்கத்தா உயர் நீதிமன்றம் நிர்ணயித்த மாத ஜீவனாம்ச தொகையை எதிர்த்து ஹாசின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஹாசின் ஜஹான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜீவனாம்ச தொகை குறித்து கேள்வி எழுப்பியது. நீதிமன்றம், ஹாசின் ஜஹானிடம், "மாதத்திற்கு ரூ.4 லட்சம் என்பது ஏற்கெனவே ஒரு பெரிய தொகை இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது.

பின்னணி

வழக்கின் பின்னணி

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஹாசின் ஜஹானுக்கு மாதம் ரூ.1.5 லட்சமும், மகளுக்கு மாதம் ரூ.2.5 லட்சமும் என மொத்தம் மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சமாக வழங்க நிர்ணயிக்கப்பட்டது. ஷமியின் வருமானம் மற்றும் சொகுசு வாழ்க்கை முறையுடன் ஒப்பிடும்போது இந்த தொகை போதுமானதல்ல என்று ஹாசின் ஜஹான் தனது மனுவில் வாதிட்டுள்ளார். ஷமி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சொகுசு கார்கள் வைத்திருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு சென்று ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மகளுக்கு தந்தையின் தரத்திற்கு ஏற்ப கல்வி மற்றும் வாழ்க்கை சூழலை அனுபவிக்கும் உரிமை உள்ளது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக, ஷமி நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.