
சர்ஃபராஸ் கான் விரலில் காயம் : இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் மாற்றம்
செய்தி முன்னோட்டம்
இரானி கோப்பைக்கான புதுப்பிக்கப்பட்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திங்கள்கிழமை (பிப்ரவரி 27) வெளியிட்டுள்ளது.
இதன்படி மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான இரானி கோப்பை டையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் கேப்டனாக இருப்பார்.
ஆனால் மிடில்-ஆர்டர் பேட்டர் சர்ஃபராஸ் கான், பயிற்சியின்போது இடது சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இரானி கோப்பையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் ஏற்பாடு செய்த உடற்பயிற்சி முகாமில் காயத்திற்கு தற்போது சர்ஃபராஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து காயமடைந்த சர்ஃபராஸுக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த பாபா இந்திரஜித் சேர்க்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் சேர்ப்பு
🚨 NEWS 🚨: Rest of India (RoI) squad for Mastercard Irani Cup announced. @mastercardindia | #IraniCup | #MPvROI
— BCCI Domestic (@BCCIdomestic) February 27, 2023
More Details 🔽https://t.co/B9iiEUhjkF