
சையத் முஷ்டாக் அலி டிராபிக்காக கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்
செய்தி முன்னோட்டம்
அக்டோபர் 16 முதல் நவம்பர் 6 வரை நடைபெற உள்ள உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டிக்கான கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் வியாழக்கிழமை (அக்டோபர் 12) நியமிக்கப்பட்டார்.
குரூப் பி'யில் இடம் பெற்றுள்ள கேரளா, மும்பையில் இமாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரை தொடங்கவுள்ளது.
குரூப் பி'யில் சிக்கிம், அசாம், பீகார், சண்டிகர், ஒடிசா, சர்வீசஸ் மற்றும் சண்டிகருடன் கேரளா மற்றும் ஹிமாச்சல பிரதேசம் போட்டியிட உள்ளது.
இந்திய அணியில் நீண்ட காலமாக சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் தேசிய தேர்வாளர்களின் நம்பிக்கையை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sanju Samson to lead kerala in Syed Mushtaq Ali Trophy
கேரளா அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தமிழக வீரர்
சஞ்சு சாம்சன் கேரளா அணியின் கேப்டனாக செயல்பட உள்ள நிலையில், ரோஹன் குன்னும்மாள் அணியின் துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார்.
முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் எம். வெங்கடரமணா இந்த சீசனில் கேரளாவின் தலைமைப் பயிற்சியாளராகவும் உள்ளார்.
கேரள அணி : சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரோஹன் குன்னும்மாள் (துணை கேப்டன்), ஷ்ரேயாஸ் கோபால், ஜலஜ் சக்சேனா, சச்சின் பேபி, முகமது அசாருதீன், விஷ்ணு வினோத், அப்துல் பாசித், சிஜோமோன் ஜோசப், வைசாக் சந்திரன், பாசில் தம்பி, கேஎம் ஆசிப், வினோத் குமார், மனு கிருஷ்ணன், வருண் நாயனார், எம்.அஜ்னாஸ், பி.கே. மிதுன், சல்மான் நிசார்.