
ஐபிஎல் 2025: ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கம்; ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் 24 ஆம் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விலக்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களுடன் காயம் மறுவாழ்வுக்காக சஞ்சு சாம்சன் ஜெய்ப்பூரிலேயே தங்க உள்ளார் என்று ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோவின் அறிக்கை தெரிவிக்கிறது.
சஞ்சு சாம்சன் அணியுடன் பயணம் செய்ய மாட்டார் என்றும், அவரது வருகை ஆட்டம் வாரியாக மதிப்பிடப்படும் என்றும் ஆர்ஆர் நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய பிறகு எல்எஸ்ஜிக்கு எதிரான போட்டியில் அவர் முன்னதாக விளையாடவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி தோல்வி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மேலே குறிப்பிட்ட இரண்டு போட்டிகளிலும் மிகக் குறுகிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதற்கிடையே, சஞ்சு சாம்சன் இல்லாத நிலையில், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல்லில் மறக்கமுடியாத அறிமுகத்தை நிகழ்த்தினார்.
தனது முதல் பந்திலேயே ஒரு சிக்ஸர் அடித்து 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இளம் வீரரான இவர் ஆர்சிபி மோதலில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
ஆறு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், பிளேஆஃப் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க அணி எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.