மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு, சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான வெற்றியின் போது, மெதுவாக பந்து வீசியதிற்காக ரூ.12 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் பாப் டு பிளெசிஸுக்குப் பிறகு மெதுவாக பந்து வீசியதாக அபராதம் விதிக்கப்பட்ட இரண்டாவது கேப்டன் ஆனார். டு பிளெசிஸைப் போலவே, இந்த சீசனில் இது சாம்சனின் முதல் குற்றம் என்பதால், அவருக்கு ரூ 12 லட்சம் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல்லில் மெதுவாக பந்துவீசினால் விதிக்கப்படும் அபராதம்
ஐபிஎல்லில் ஒரு சீசனில் மெதுவாக பந்துவீசினால் முதல்முறை பந்துவீச்சு கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை மீறினால், பந்துவீச்சு கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதமும், அணியின் மற்ற 10 வீரர்களுக்கு ஆறு லட்சம் அல்லது அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். ஒரு சீசனில் மூன்றாவது மற்றும் ஒவ்வொரு அடுத்தடுத்த குற்றங்களுக்கும், பந்துவீச்சு அணியின் கேப்டனுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்படும். அணியில் உள்ள மற்ற 10 வீரர்களுக்கும் ரூ.12 லட்சம் அல்லது அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.