ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் : சஞ்சு சாம்சன் சாதனை
செய்தி முன்னோட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3,000 ரன்களை எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 போட்டியின் போது சாம்சன் இந்த மைல்கல்லை எட்டினார்.
இந்தப் போட்டியில், ஜிடி அணியின் 178 ரன்களை சேஸ் செய்த போது, சாம்சன் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.
இதில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். மேலும் 187.50 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்தார்.
Sanju Samson record for Rajasthan Royals
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனின் புள்ளிவிபரங்கள்
115 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக, சஞ்சு சாம்சன் 29.76 சராசரியிலும் 139.10 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 3,006 ரன்கள் எடுத்துள்ளார்.
இதில் இரண்டு சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் அடங்கும்.
அவரது சிறந்த ஸ்கோர் 119 ஆகும். 2021 ஆம் ஆண்டு அவரது ஐபிஎல் வாழ்க்கையில் மிகச் சிறந்த தொடராக இருந்தது.
அந்த ஆண்டு 14 போட்டிகளில், 40.33 சராசரி மற்றும் 136.72 ஸ்ட்ரைக் ரேட்டில் 484 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களை அடித்தார்.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சனுக்கு அடுத்து அஜிங்க்யா ரஹானே 2,810 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.