Page Loader
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் நிதியுதவி
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் நிதியுதவி

உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் நிதியுதவி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 26, 2023
05:08 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்ஏஐ) சீனாவின் செங்டுவில் நடைபெறவிருக்கும் உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக, எஸ்ஏஐ நேஷனல் சென்டர்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸிலிருந்து (என்சிஓஇ) 4 வாள்வீச்சு வீரர்களுக்கு நிதியுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளது. டாப்ஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வரும் அபய் கிருஷ்ணா ஷிண்டே, தன்னு குலியா, என்சிஓஇ பாட்டியாலாவைச் சேர்ந்த ஷிக்ஷா பலூரியா மற்றும் என்சிஓஇ அவுரங்காபாத்தைச் சேர்ந்த கேலோ இந்தியா தடகள வீரர் துர்கேஷ் மிலிந்த் ஜஹாகிர்தார் ஆகிய நான்கு பேரும் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் பல்கலைக்கழக பல்கலைக்கழக அளவில் செயல்படும் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச போட்டிக்கான அனுபவத்தை வழங்கும்.

world youth games will start on july 28th

ரேஸ் வாக்கிங், உயரம் தாண்டுதல் வீரர்களுக்கும் நிதியுதவி

வாள்வீச்சு மட்டுமல்லாது என்சிஓஇ பெங்களூரில் பயிற்சி பெற்று வரும் ரேஸ் வாக்கர் ஹர்தீப் மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் கியா ஆகியோருக்கும் நிதியுதவி வழங்க இந்திய விளையாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், என்சிஓஇ திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டேக்வாண்டோ விளையாட்டு வீரர்கள் ஷிவாங்கி சனம்பம் மற்றும் பார்சிடா நோங்மைதேம், என்சிஓஇ இட்டாநகரின் வுஷூ வீரர் சன்மா பிரம்மாவும் இந்த நிதியுதவி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற தேர்வாகியுள்ளனர். உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடக்க உள்ளது.