சச்சினுடன் முதல்முறை சந்திப்பு : விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் சுவாரஷ்ய அனுபவங்கள்
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் உலகளவில் மில்லியன் கணக்கானவர்களிடம் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி யாரும் எட்ட முடியாத பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்தியாவுக்காக சச்சினுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டசாலிகளில் தற்போது களத்தில் முன்னணியில் இருக்கும் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரும் அடங்குவர். கோலியும் ரோஹித்தும் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டனர் மற்றும் டெண்டுல்கருடன் களத்தில் சில மறக்கமுடியாத அனுபவங்களையும் கொண்டுள்ளனர். சுவாரஸ்யமாக, 2008 இல் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் டெண்டுல்கர் இருந்தபோது கோலியின் சர்வதேச அறிமுகம் நடந்தது.
சச்சினுடன் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் முதல் அனுபவம்
அந்த போட்டியின்போது யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்றோர் புதுமுக வீரர்கள் யார் வந்தாலும் சச்சினின் காலை தொட்டு வணங்க வேண்டும் என்பது கட்டாயம் என கோலியிடம் விளையாட்டாக தெரிவித்துள்ளனர். இதை உண்மை என்று நம்பி கோலி சச்சினிடம் சென்று அவர் காலில் விழ, அதன்பிறகே கோலிக்கு உண்மை தெரிந்துள்ளது. இது தான் சச்சினுடன் அவரது முதல் அனுபவமாகும். சச்சின் டெண்டுல்கரை முதல்முறையாக சந்தித்ததில் ரோஹித் ஷர்மாவுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. 2004-05 இந்திய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெண்டுல்கர் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவுக்கு வந்திருந்தபோது சந்தித்ததை ரோஹித் நினைவு கூர்ந்தார். டெண்டுல்கர் தனது பேட்டிங்கைப் பார்க்க சிறிது நேரம் செலவிட்டதையும், இதனால் அப்போது தான் மிகவும் பதற்றமடைந்ததாகவும் ரோஹித் கூறியுள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்