ஒருநாள் உலகக்கோப்பை: 149 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இன்று(அக் 24) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோற்கடித்துள்ளது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுள் ஒருவராக களமிறங்கிய குயின்டன் டி காக் 174 ரன்களும், எய்டன் மார்கம் 60 ரன்களும், ஹென்ரிச் கிளாசன் 90 ரன்களும், எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களை எடுத்தது.
வங்கதேசம் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹாசன் அகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சஜின்லா
புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா
383 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான மஹ்முதுல்லாஹ் 111 ரன்களை குவித்து தனது அணிக்கு பெருமை சேர்த்துள்ளார். லிட்டன் தாஸ் 22 ரன்களை எடுத்துள்ளார்.
இவர்களை தவிர, பிற வங்கதேச வீரர்கள் 20 ரன்களை கூட தாண்டாமல் அவுட் ஆகிவிட்டனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், மேக்ரோ ஜென்சன், ககிசோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், 46.4 ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்களை எடுத்த வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது.
இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.