
ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள்
செய்தி முன்னோட்டம்
2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 11வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) டெல்லி கேப்பிடல்ஸை (டிசி) எதிர்கொள்கிறது.
முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்ததால், முதல் வெற்றியை பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதற்கிடையில், ஆர்ஆர் தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அணியை வீழ்த்திஇருந்தாலும், இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் தோற்றனர்.
இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இரு அணிகளும் தலா 13 முறை வெற்றி பெற்றுள்ளனர்.
கடைசியாக இரு அணிகளும் மோதிய போது டிசி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்ஆர் அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேப்பிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
போட்டி குவஹாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்ஆர் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்
டிசி : டேவிட் வார்னர் (கேப்டன்), பிருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிலீ ரஸ்ஸௌ, பில் சால்ட், யாஷ் துல், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது