ஜடேஜாவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் CSK-க்கு வருவது உறுதியா? CSK அணி X-இல் சூசக பதிவு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் தொடரில் மிகவும் பரபரப்பான வீரர்கள் பரிமாற்றம் (Trade) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்குச் செல்வதும், அதற்கு ஈடாக சிஎஸ்கே-வின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் RR அணிக்கு திரும்புவதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை உறுதி படுத்துவது போல இன்று CSK அணி தனது X தளத்தில் சஞ்சு சாம்சனிற்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை பதிவிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. சஞ்சு சாம்சன் (RR), ரவீந்திர ஜடேஜா (CSK), மற்றும் சாம் கரண் (CSK) ஆகியோர் பெயர் தான் இந்த வர்த்தக மாற்றத்தில் அடிபடும் பெயர்கள். தற்போது வீரர்கள் பரிமாற்றத்திற்கான விருப்பம் பிசிசிஐ-க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
More power to you, Sanju! Wishing you a super birthday! 🥳💛#WhistlePodu pic.twitter.com/f2lE6pWkPy
— Chennai Super Kings (@ChennaiIPL) November 11, 2025
ஒப்புதல்
அணி மாற்றத்திற்கு ஒப்புக்கொண்ட வீரர்கள்
இந்த ஒப்பந்தம் அடுத்த 48 மணி நேரத்தில் இறுதி ஒப்புதலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சஞ்சு சாம்சன், ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகிய மூவரும் இந்த மாற்றத்திற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா தனது ஐபிஎல் பயணத்தின் ஆரம்ப ஆண்டுகளில் (2008, 2009) ராஜஸ்தான் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. RR அணி முதலில் தீக்சனா அல்லது மதீஷா பத்திரனாவை கேட்டதாகவும், அது நிராகரிக்கப்பட்ட பின்னர் சாம் கரண் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருமே தங்கள் அணிகளில் தலா ₹18 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட (Retained) வீரர்கள் ஆவர்.
புதிய கேப்டன்
ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் யார்?
சஞ்சு சாம்சன் வெளியேறும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2026 ஐபிஎல் தொடரில் புதிய கேப்டன் நியமிக்கப்படவுள்ளார். கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் இல்லாதபோது அணியை வழிநடத்திய ரியாண் பராகுக்கு நிரந்தர கேப்டன் பொறுப்பு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. கேப்டன் பதவிக்கான பிரதான போட்டியாளர்களாக, RR அணியின் உள்ளூர் வீரர்களான துருவ் ஜூரெல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் உள்ளனர். அனுபவம் வாய்ந்த ரவீந்திர ஜடேஜா RR அணிக்குத் திரும்பினால், அவரும் கேப்டன் பொறுப்புக்கு ஒரு முக்கிய தேர்வாகக் கருதப்படுவார். இதற்கிடையில், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஜடேஜாவை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர் சிஎஸ்கே-வுக்கு ஒரு 'Gun Player' என்றும் பொதுவெளியில் வலியுறுத்தியுள்ளார்.