அர்ஜுன் டெண்டுல்கருக்கு கல்தா? மீண்டும் வருகிறார் ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2023 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 25வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணியுடன் மோத உள்ளது. இரண்டு அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசனில் 4 போட்டிகளில் விளையாடி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியும், அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியபொது ரோஹித் சர்மாவுக்கு வயிற்றுக் கோளாறு காரணமாக அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அணியை வழிநடத்திய நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் 11 இல் சேர்க்கப்பட்டார்.
மீண்டும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைத்தாலும், பந்துவீச்சில் விக்கெட் எடுக்கவில்லை. மேலும் பேட்டிங் செய்யவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடக்கும் போட்டியில் மீண்டும் ரோஹித் சர்மா களமிறங்குவதால் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது. அர்ஜுன் டெண்டுல்கர் தவிர நேஹால் வதேராவும் நீக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தால், அர்ஜுன் டெண்டுல்கரை இம்பாக்ட் வீரராக அணியில் சேர்க்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, கடைசி ஆட்டத்தில் விளையாடாத ஜேசன் பெஹ்ரென்டார்ஃப் அணியில் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.