LOADING...
மும்பை இந்தியன்ஸிற்கு பேரதிர்ச்சி: ரோஹித் ஷர்மா ஐபிஎல் 2026லிருந்து தற்காலிகமாக விலகல்; ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய தகவல்
ரோஹித் ஷர்மா ஐபிஎல் 2026லிருந்து தற்காலிகமாக விலகல்

மும்பை இந்தியன்ஸிற்கு பேரதிர்ச்சி: ரோஹித் ஷர்மா ஐபிஎல் 2026லிருந்து தற்காலிகமாக விலகல்; ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 16, 2026
07:53 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 சீசனில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மேலும் ஒரு பேரிடியாக, அதன் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக அணியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய (ஏப்ரல் 16) போட்டியின் டாஸின் போது, கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். ரோஹித் ஷர்மாவிற்கு ஏற்பட்டுள்ள தசைநார் காயம் காரணமாக, அவர் குறைந்தது இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை

ரோஹித் ஷர்மாவின் காயம் மற்றும் மருத்துவப் பரிசோதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு எதிரான கடந்த போட்டியின் போது, ரோஹித் ஷர்மா 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதால் பாதியிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இன்று நடைபெற்ற ஸ்கேன் பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர் முழுமையாகக் குணமடைய இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கவும், மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்ளவும் அவர் மைதானத்திற்கு வெளியே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அறிமுக வீரர்

மும்பை அணியின் புதிய மாற்றங்களும் அறிமுக வீரரும்

ரோஹித் ஷர்மாவிற்குப் பதிலாகத் தொடக்க வீரராகக் குயிண்டன் டி காக் அணியில் மீண்டும் இணைந்துள்ளார். அவர் மற்றொரு தென்னாப்பிரிக்க வீரரான ரையான் ரிக்கிள்டனுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்றைய போட்டியில் மயாங்க் ராவத் என்ற இளம் வீரருக்கு அறிமுக வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் வழங்கியுள்ளது. மிட்செல் சான்ட்னர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்பதும் மும்பை அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, ரோகித் இல்லாமல் இந்தப் பெரிய சவாலை எப்படிக் கையாளப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement