Page Loader
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா
எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா

எழுதியவர் Sekar Chinnappan
Jul 21, 2023
11:54 am

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வியாழன் (ஜூலை20) அன்று எம்எஸ் தோனியை பின்னுக்கு தள்ளி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். டிரினிடாட்டில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த போட்டியில் 80 ரன்கள் குவித்த நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 443 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் 42.92 சராசரியில் 17,298 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்கள்), விராட் கோலி (25,484 ரன்கள்), ராகுல் டிராவிட் (24,064 ரன்கள்), சௌரவ் கங்குலி (18,433 ரன்கள்) ஆகியோர் மட்டுமே தற்போது ரோஹித்தை விட முன்னிலையில் உள்ளனர்.

rohit scripts history with yashasvi jaiswal

யஷஸ்வி ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப்பில் 139 ரன்கள் எடுத்ததன் மூலம், இந்திய கிரிக்கெட் அணிக்காக முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் தொடர்ச்சியாக 100+ ரன்களை எடுத்துள்ளனர். இதன் மூலம் முதல் விக்கெட்டுக்கு தொடர்ச்சியாக இரண்டு முறை 100+ ஸ்கோர்களை எடுத்த ஆறாவது இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றனர். இதற்கு முன்னதாக, வீரேந்திர சேவாக் மற்றும் முரளி விஜய் (2008-09), சுனில் கவாஸ்கர் மற்றும் ஃபரோக் என்ஜினியர் (1973-74), சுனில் கவாஸ்கர் மற்றும் அன்சுமான் கெய்க்வாட் (1976), சுனில் கவாஸ்கர் மற்றும் அருண் லால் (1982), சடகோப்பன் ரமேஷ் மற்றும் தேவங் காந்தி (1999) ஆகியோர் மட்டுமே இதை செய்துள்ளனர்.