Page Loader
'கோலி கோலி' என கோஷம் எழுப்பிய ரசிகர்கள்! ஆக்ரோஷம் காட்டிய ரோஹித் ஷர்மா!
ஆக்ரோஷம் காட்டிய ரோஹித் ஷர்மா

'கோலி கோலி' என கோஷம் எழுப்பிய ரசிகர்கள்! ஆக்ரோஷம் காட்டிய ரோஹித் ஷர்மா!

எழுதியவர் Sekar Chinnappan
May 17, 2023
01:13 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த இரண்டு வாரங்களாக விளையாடாத நவீன்-உல்-ஹக் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களம் கண்டார். மே 1 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில், அவருக்கும் விராட் கோலிக்கும் இடையிலான சண்டை மிகவும் சர்ச்சையான நிலையில், அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெற்றார். ஆனால் அந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. மேலும் அதன் பிறகு நவீன்-உல்-ஹக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அதன் பிறகு தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணிக்கு திரும்பினார். இதில் நான்கு ஓவர்களை முழுமையாக பந்துவீசிய நவீன் 37 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை.

rohit sharma aggressive sixer

நவீன்-உல்-ஹக்கின் பந்தை சிக்சருக்கு விளாசிய ரோஹித் ஷர்மா

பவர்பிளேயில் நவீன்-உல்-ஹக் இரண்டு ஓவர்கள் பந்துவீசி 16 ரன்களை விட்டுக்கொடுத்தார். குறிப்பாக அவர் தனது இரண்டாவது ஓவரை வீசியபோது ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் 'கோலி கோலி' என கோஷமிட்ட வண்ணம் இருந்தனர். அப்போது பேட்டிங் முனையில் இருந்த ரோஹித் ஷர்மா ஸ்கொயர் லெக்கில் திருப்பி அடித்து 65-மீட்டர் அளவிற்கு சிக்சரை விளாசி ஆக்ரோஷம் காட்டி ரசிகர்களை வாயடைக்க வைத்தார். இதற்கிடையே டெத் ஓவர்களில் 17வது ஓவரை வீசிய நவீன் அந்த ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தாலும். 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்கினார். டிம் டேவிட் அவரது பந்துகளை சிக்சருக்கு விளாச, மும்பை இந்தியன்ஸ் இலக்கை நெருங்கியது. எனினும் கடைசி ஓவரில் மொஷின் கான் அபாரமாக பந்துவீசி வெற்றியை எல்எஸ்ஜிக்கு பெற்றுக்கொடுத்தார்.