
பேட்ட பராக்; ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து ரியான் பராக் சாதனை
செய்தி முன்னோட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், 2025 சீசனின் 53வது போட்டியில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை அடித்து, ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையை செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவரது சிறப்பான ஆட்டம் இருந்தபோதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இது தொடரில் அவர்களின் ஒன்பதாவது தோல்வியைக் குறிக்கிறது. ரியான் பராக் 13வது ஓவரில் மொயீன் அலியின் ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்கள் விளாசினார்.
பின்னர் வருண் சக்கரவர்த்தி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் அவர் தொடர்ந்து ஆறாவது சிக்ஸரை விளாசினார்.
தோல்வி
1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
ரியான் பராக்கின் அதிரடி ஆட்டம் ராஜஸ்தானை 71/5 என்ற நிலையில் பின்னடைவில் இருந்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது.
அவர் வெறும் 27 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டி, 45 பந்துகளில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால், தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்யும் வாய்ப்பை இழந்தார். பராக்கின் திறமையான ஆட்டம் இருந்தபோதிலும், இறுதி கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் தடுமாறியது.
ஷிம்ரான் ஹெட்மயர் மற்றும் பராக் ஆகியோரின் ஆட்டமிழப்புகள் பரப்பரப்பைக் கூட்டியது.
கடைசியில் இறுதிப் பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் ரன் அவுட் ஆனார். இது கேகேஆர் அணிக்கு வியத்தகு வெற்றியைப் பெற்றுத் தந்தது.