LOADING...
38வது கேப்டனாகிறார் ரிஷப் பண்ட்; அதிக டெஸ்ட் கேப்டன்களைக் கொண்ட அணிகளில் இந்தியாவுக்கு எந்த இடம்?
இந்தியாவின் 38வது கேப்டனாகிறார் ரிஷப் பண்ட்

38வது கேப்டனாகிறார் ரிஷப் பண்ட்; அதிக டெஸ்ட் கேப்டன்களைக் கொண்ட அணிகளில் இந்தியாவுக்கு எந்த இடம்?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2025
08:35 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில் கழுத்துச் சுளுக்கு (neck spasm) காரணமாக விலகியதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். இதன் மூலம், ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அணியை வழிநடத்தும் 38 வது கேப்டன் என்ற பெருமையைப் பெறுகிறார். முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின்போதே கில் கழுத்தில் காயம் காரணமாக வெளியேறினார். வெற்றி கட்டாயமான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக, கில் விலகியதை பிசிசிஐ உறுதிப்படுத்தியது. முதல் டெஸ்ட் போட்டியின் பெரும்பகுதிக்கும் ரிஷப் பண்ட் துணைக் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேப்டன்கள் பட்டியல்

ரிஷப் பண்ட் கேப்டனாகப் பொறுப்பேற்பதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேப்டன்களைக் கொண்ட அணிகள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் கூட்டாக மூன்றாவது இடத்தில் (38 கேப்டன்கள்) இணைகிறது. இந்த பட்டியலில் இங்கிலாந்து அணி 82 கேப்டன்களுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 47 கேப்டன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதற்கிடையே, சனிக்கிழமை (நவம்பர் 22) தொடங்க உள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ரிஷப் பண்டின் தலைமையில் இந்திய அணி தொடரைச் சமன் செய்ய போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.