Page Loader
துலீப் டிராபியில் மீண்டும் விளையாட ரிஷப் பந்த் தயாராகி வருகிறார்
ரிஷப் பந்த், தனது பயிற்சியின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

துலீப் டிராபியில் மீண்டும் விளையாட ரிஷப் பந்த் தயாராகி வருகிறார்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 03, 2024
07:04 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய அணியின்இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த், செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கும் துலீப் டிராபியின் மூலம் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு திரும்ப உள்ளார். ரிஷப் பந்த், தனது பயிற்சியின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்- இது தற்போது வைரலாகி வருகிறது. இந்த துலீப் டிராபி, ஒரு அபாயகரமான கார் விபத்து மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு அறுவை சிகிச்சைகள் காரணமாக ஏற்பட்ட ஒரு இடைவெளிக்குப் பின்னர், பந்த் மீண்டும் திரும்புவதைக் குறிக்கும். பந்த் , வரவிருக்கும் டெஸ்ட் சீசனில் இந்தியாவுக்கு முக்கியமானவராக இருப்பார்.

மீட்பு

அறுவைசிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்த பந்த்தின் பயணம்

இந்தியாவுக்காக பந்த் கடைசியாக 2022 டிசம்பரில் பங்களாதேஷுக்கு எதிராக விளையாடியது. அதன் பின்னர் நடந்த கடுமையான விபத்தைத் தொடர்ந்து, அவரது முழங்காலில் உடைந்த மூன்று தசைநார்கள் சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கு முன்பு மீட்பு செயல்முறை ஒரு வருடத்திற்கும் மேலாக அவரை ஒதுக்கி வைத்தது. அவர் 2024 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மீண்டும் பங்குபெற்றார். அங்கு அவர் டெல்லி கேபிடல்ஸ் (டிசி) ஐ வழிநடத்தினார்.

முன்னேற்றம்

டி20 உலகக் கோப்பை, SL தொடரில் பந்த் இடம்பெற்றார்

அவரது வெற்றிகரமான ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து, பந்த் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக விளையாடினார். இந்தியா பட்டத்தை வென்ற போட்டியில் இடது கை பேட்டர் 127.61 ஸ்ட்ரைக் ரேட்டில் 171 ரன்கள் எடுத்தார். டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, பந்த் இலங்கையில் இரண்டு டி20 மற்றும் ஒரு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் 33 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post