LOADING...
INDvsSA டெஸ்ட் தொடரில் இருந்து ஷுப்மன் கில் விலகல்; உறுதி செய்தது பிசிசிஐ
INDvsSA டெஸ்ட் தொடரில் இருந்து ஷுப்மன் கில் விலகல்

INDvsSA டெஸ்ட் தொடரில் இருந்து ஷுப்மன் கில் விலகல்; உறுதி செய்தது பிசிசிஐ

எழுதியவர் Sekar Chinnappan
Nov 20, 2025
10:51 am

செய்தி முன்னோட்டம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கழுத்து காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளார். இதனால், விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ஷுப்மன் கில்லின் இந்த விலகலை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது ஷுப்மன் கில்லுக்குக் கழுத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாகப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், காயத்தில் முன்னேற்றம் இருந்தாலும், இரண்டாவது டெஸ்ட்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாய் சுதர்சன்

சாய் சுதர்சன் சேர்க்கப்பட வாய்ப்பு

ஷுப்மன் கில் இல்லாத நிலையில், துணைக் கேப்டனான ரிஷப் பண்ட் அணியை வழிநடத்துவார். மேலும், இடது கை டாப் ஆர்டர் பேட்டரான சாய் சுதர்சன் விளையாடும் லெவனில் ஷுப்மன் கில்லின் இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியின்போதும் ஷுப்மன் கில் இல்லாதபோது அணியை ரிஷப் பண்டே வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவிடம் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணிக்கு, சனிக்கிழமை (நவம்பர் 22) தொடங்கும் கௌஹாத்தி டெஸ்ட் போட்டியில் வெற்றி கட்டாயமாகும். ஷுப்மன் கில்லின் காயம் குணமாக ஒரு வாரம் ஆகலாம் என்றும், அவர் இம்மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடரில் திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.