NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2025க்கு முன்னதாக; விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக ரின்கு சிங் நியமனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2025க்கு முன்னதாக; விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக ரின்கு சிங் நியமனம்
    விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக ரின்கு சிங் நியமனம்

    ஐபிஎல் 2025க்கு முன்னதாக; விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக ரின்கு சிங் நியமனம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 20, 2024
    05:00 pm

    செய்தி முன்னோட்டம்

    ரின்கு சிங் உத்தரபிரதேச அணிக்கு வரவிருக்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது மாநில அளவில் அவரது முதல் தலைமைத்துவத்தை குறிக்கும். டிசம்பர் 21ஆம் தேதி விஜயநகரில் நடக்கும் குரூப் டி மோதலில் ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்கு எதிராக உத்தரப் பிரதேசம் தனது ஆட்டத்தைத் தொடங்குகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் முடிவடைந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் அணியை வழிநடத்திய புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக ரின்கு சிங் தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த உபி டி20 லீக்கில் மீரட் மேவரிக்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு, அணிக்கு பட்டத்தை வென்று கொடுத்ததோடு, 161.54 ஸ்டிரைக் ரேட்டில் 210 ரன்கள் எடுத்தார்.

    ஐபிஎல் 2025

    ஐபிஎல் 2025இல் தக்கவைத்துக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி ரின்கு சிங்கை தக்கவைத்துக் கொண்டது.

    இதனால். அவர் கேகேஆர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என்ற ஊகங்கள் இருந்து வரும் நிலையில், அவர் விஜய் ஹசாரே போன்ற உள்நாட்டு தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

    "2015-16ல் எங்கள் வெற்றிக்குப் பிறகு அணியை மற்றொரு பட்டத்திற்கு அழைத்துச் செல்வதை இலக்காகக் கொண்டதால், உத்தரப் பிரதேசத்திற்கான எனது திட்டங்களில் நான் கவனம் செலுத்துகிறேன்" என்று ரின்கு சிங் கூறினார். ஒரு சிறந்த லிஸ்ட்-ஏ செயல்திறன் கொண்ட அவர், 52 இன்னிங்ஸ்களில் 48.69 சராசரியில் ஒரு சதம் மற்றும் 17 அரைசதங்கள் உட்பட 1,899 ரன்கள் குவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய் ஹசாரே கோப்பை
    கிரிக்கெட் செய்திகள்
    கிரிக்கெட்
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    விஜய் ஹசாரே கோப்பை

    விஜய் ஹசாரே டிராபியின் தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம் தமிழ்நாடு செய்தி
    Sports Round Up : தினேஷ் கார்த்திக் தமிழக அணியின் கேப்டனாக நியமனம்; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழகம் அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள் ஐபிஎல்
    விஜய் ஹசாரே கோப்பை 2023-24 : பெங்கால் அணியை எளிதாக வீழ்த்திய தமிழகம் தமிழ்நாடு கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு ரோஹித் ஷர்மா
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 3 கோரிக்கைகளை நிராகரிக்கும் ஐசிசி; சாம்பியன்ஸ் டிராபியின் கதி என்ன? ஐசிசி
    நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு ஜஸ்ப்ரீத் பும்ராவின் பெயர் பரிந்துரை; இரண்டாவது முறையாக விருதைப் பெறுவாரா? ஜஸ்ப்ரீத் பும்ரா
    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு பார்டர் கவாஸ்கர் டிராபி

    கிரிக்கெட்

    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: மிட்செல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு; 180 ரன்களுக்கு சுருண்டது இந்தியா பார்டர் கவாஸ்கர் டிராபி
    டெஸ்ட் கிரிக்கெட்டில் கோல்டன் டக்கவுட் ஆன ஏழாவது இந்தியர் ஆனார் யஷஸ்வி ஜெய்ஸ்வால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பிங்க்-பால் டெஸ்டில் அதிவேக சதம்; தனது சாதனையை தானே முறியடித்தார் டிராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட் 5 லட்சம் ரன்கள்; வரலாற்றில் யாரும் எட்டமுடியாத சாதனை படைத்தது இங்கிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    உத்தரப்பிரதேசம்

    தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு  கொலை
    ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவுக்கு வெப்ப அலை எச்சரிக்கை  ராஜஸ்தான்
    மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட பிறந்த குழந்தை பலி இந்தியா
    திருட சென்ற வீட்டில் AC போட்டுவிட்டு மட்டையாகிய திருடனை எழுப்பி கைது செய்த போலீசார்  வாரணாசி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025