LOADING...
சிலிண்டர் சுமந்து மகனை சாதிக்க வைத்த ரிங்கு சிங்கின் தந்தை; கேன்சரால் காலமானார்
ரிங்கு சிங்கின் தந்தை புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார்

சிலிண்டர் சுமந்து மகனை சாதிக்க வைத்த ரிங்கு சிங்கின் தந்தை; கேன்சரால் காலமானார்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 27, 2026
09:09 am

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங், புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார். தனது வாழ்வின் மிகச்சிறந்த கிரிக்கெட் தருணங்களை அனுபவித்து வரும் ரிங்கு சிங்கிற்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது. அலிகார் பகுதியை சேர்ந்த கான்சந்த் சிங், ஒரு கேஸ் சிலிண்டர் விநியோகிப்பாளராகபணியாற்றி வந்தார். கடுமையான வறுமையிலும், தனது மகனின் கிரிக்கெட் கனவு சிதைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தந்தையின் இந்த தியாகமே ரிங்கு சிங்கை இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாற்றியுள்ளது. கடந்த ஆண்டு, தனது தந்தைக்காக ரூ. 3.19 லட்சம் மதிப்பிலான கவாசாகி நிஞ்ஜா பைக்கை ரிங்கு சிங் பரிசளித்தது அனைவரையும் நெகிழ வைத்தது குறிப்பிடத்தக்கது.

சோகம்

உலகக்கோப்பைக்கு நடுவே சோகம்

தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், ரிங்கு சிங் தனது தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சென்னை ஆட்டத்திற்கு முன்பு முகாமிலிருந்து வெளியேறினார். இருப்பினும், கடமை உணர்வுடன் மீண்டும் அணியில் இணைந்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் விளையாடும் லெவனில் இடம் பெறவில்லை என்றாலும், மாற்று வீரராக களத்தில் இணைந்தார். ரிங்கு சிங்கின் தந்தை மறைவுக்கு ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். "கான்சந்த் சிங் ஜியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உலகக்கோப்பையில் தனது பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ரிங்கு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இது மிகவும் கடினமான காலம். இந்த துயரத்தை தாங்கும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement