
வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி!!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், மகளிர் ஐபிஎல்லின் முதல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்காக விளையாட உள்ளார்.
ரூ.1.5 கோடி கொடுத்து ஆர்சிபி அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.
ரேணுகா அக்டோபர் 2021 இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த ஆண்டில் அவர் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.
ஆனால் 2022 இல் தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ரேணுகா சிங், தற்போது 28 டி20 போட்டிகளில் 6.45 என்ற எகானாமியில் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மேலும், 2022 ஆம் ஆண்டின் ஐசிசியின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மகளிர் ஐபிஎல் ஏலம்
Renuka Singh 🤝 @RCBTweets
— Women's Premier League (WPL) (@wplt20) February 13, 2023
Talk about adding some pace to the bowling attack 👌 👌#WPLAuction pic.twitter.com/GX5G7zZqHq