
ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது அதிவேக சதம் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் சாதனை
செய்தி முன்னோட்டம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் ஆசிப் கான் வியாழக்கிழமை (மார்ச் 16) அன்று கிர்திபூரில் நேபாளத்திற்கு எதிரான கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 போட்டியில் சதமடித்தார்.
33 வயதான அவர் 42 பந்துகளில் 101* ரன்கள் எடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் என்ற நிலைக்கு உயர்த்தினார்.
மேலும் இந்த சதத்தின் மூலம், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சரை பின்னுக்குத் தள்ளி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நான்காவது அதிவேக சதம் அடித்தவர என்ற சாதனையை ஆசிஃப் படைத்தார்.
ஆசிப் கான்
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வீரர்கள்
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த சாதனையை தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் படைத்துள்ளார். 2015 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 31 பந்துகளில் அவர் சதம் விளாசினார்.
இந்தப் பட்டியலில் கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும், ஷாஹித் அப்ரிடி 37 பந்துகளில் இலங்கைக்கு எதிராகவும் சதமடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ஆசிப் கான் 41 பந்துகளில் சதம் அடித்து பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கவுஸ்துப் குடிபாட்டியின் கூற்றுப்படி, ஆசிஃப் இப்போது வெளிநாட்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
முன்னதாக, 1999 இல் வங்கதேசத்துக்கு எதிராக 45 பந்துகளில் சதம் அடித்து பிரையன் லாரா இந்த சாதனையை செய்திருந்தார்.