ஐபிஎல் 2023 : கோப்பையை வெல்லப்போவது சிஎஸ்கே தான்! காரணம் என்ன?
2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடக்க ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் நான்கு முறை வெற்றியாளர்களான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை எதிர்கொள்கிறது. முந்தைய சீசனில் கடைசிக்கு முந்தைய இடத்தைப் பிடித்த நிலையில், இந்த முறை மிகச்சிறந்த கம்பேக்கை கொடுக்கும் முனைப்புடன் உள்ளனர். மேலும் சிஎஸ்கே இந்த முறை ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவதற்கு ஏராளமான சாத்தியங்களைக் கொண்டுள்ளனர். தோனிக்கு இது கடைசி சீசன் என்பதால் வெற்றியுடன் முடிக்கவே அவர் விரும்புவார். சிஎஸ்கேவில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, ஜடேஜா, அம்பதி ராயுடு, மிட்செல் சான்ட்னர், தோனி மற்றும் தீபக் சாஹர் என வலுவான வீரர்கள் உள்ளனர்.
இளமையும் அனுபவமும் கலந்த கலவையாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்
கடந்த சில ஆண்டுகளாக, சிஎஸ்கே தந்தைகளின் இராணுவம் என்று மூத்த வீரர்கள் மட்டுமே உள்ளதாக விமர்சிக்கபப்ட்டு வந்தது. ஆனால் இந்த முறை அவர்கள் இளமை மற்றும் அனுபவத்தின் கலவையாக உள்ளனர். சாஹர், சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்தினர். கெய்க்வாட் மற்றும் கான்வே ஆகியவை வரவிருக்கும் சீசனிலும் சென்னை அணியின் ஓபனர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே சென்னையில் 7 போட்டிகளில் விளையாட உள்ளதால், அது தோனி தலைமையிலான அணிக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடவே இம்பாக்ட் பிளேயர் விதியும் அமல்படுத்தப்படுவதால், அது தோனிக்கு கூடுதல் பலத்தை கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவும்.