
RCBயின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக்
செய்தி முன்னோட்டம்
நேற்று SRH அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
288 என்ற கடினமான இலக்கை நோக்கி இறுதிவரை போராடி தோற்றது RCB.
RCB எடுக்கவேண்டிய இலக்கு அதிகமாக இருப்பினும், RCB அணியின் தினேஷ் கார்த்திக் தான் களத்தில் நின்று அணிக்கு அதிக ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.
ஆர்சிபி முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது தினேஷ் கார்த்திக் களமிறங்கி 35 பந்துகளில், 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.
embed
ஒன்-மேன் ஆர்மி
#IPLClicks | இறுதி வரை வெற்றிக்கு போராடிய ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ்!#SunNews | #DineshKarthik | #PatCummins | #RCBvsSRH | @DineshKarthik pic.twitter.com/hgVJRXw8hH— Sun News (@sunnewstamil) April 16, 2024