
ஐபிஎல்லில் யாரும் எட்ட முடியாத வரலாற்றுச் சாதனை படைத்தார் ரவீந்திர ஜடேஜா
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அன்று எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியின் போது ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டினார்.
சிஎஸ்கே அணி இந்த போட்டியில் ஏமாற்றமளிக்கும் வகையில் தோல்வியைச் சந்தித்த போதிலும், ஐபிஎல் வரலாற்றில் 3,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றார்.
ஏற்கனவே ஐபிஎல்லில் 160 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரவீந்திர ஜடேஜா, இந்தப் போட்டியின் போது 19 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட முக்கியமான 25 ரன்கள் எடுத்து 3,000 ரன்களை எட்டினார்.
27வது வீரர்
ரன்கள் அடிப்படையில் 27வது வீரர்
ஐபிஎல்லில் ரன்களை மட்டும் அடிப்படையாக வைத்தால், 3,000 ரன்களை எட்டிய 27வது வீரராக ரவீந்திர ஜடேஜா உள்ளார்.
அதே நேரத்தில் 3,000 ரன்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் என்ற இரட்டை மைல்கல்லை ரவீந்திர ஜடேஜாவைத் தவிர வேறு எந்த வீரரும் 3,000 ரன்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் என்ற அரிய இரட்டை மைல்கல் சாதனையை படைக்கவில்லை.
இதற்கிடையே, ஆர்சிபிக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக சொந்த மண்ணில் ஆர்சிபியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#IPLUpdate | ஜடேஜாவின் அசத்தல் சாதனை!#SunNews | #RavindraJadeja | #CSKvRCB pic.twitter.com/X1BzKqYdYH
— Sun News (@sunnewstamil) March 29, 2025