Page Loader
ஒருநாள் கிரிக்கெட்டில் கபில்தேவின் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா
ஒருநாள் கிரிக்கெட்டில் கபில்தேவின் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா

ஒருநாள் கிரிக்கெட்டில் கபில்தேவின் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா

எழுதியவர் Sekar Chinnappan
Sep 15, 2023
06:43 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) நடந்த வங்கதேசத்திற்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா இந்த மைல்கல்லை எட்டினார். மேலும் இதன் மூலம், ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் 2,500 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார். இதற்கு முன்னதாக கபில்தேவ் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தார். ஜடேஜா இப்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் முக்கிய தூணாக இருந்து வருகிறார்.

jadeja seventh indian to score 200 wickets in odi

200 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது இந்தியர்

ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது இந்திய கிரிக்கெட் அணி வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே (337), ஜவகல் ஸ்ரீநாத் (315), அஜித் அகர்கர் (288), ஜாகீர் கான் (282), ஹர்பஜன் சிங் (269), மற்றும் கபில்தேவ் (253) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் 200 விக்கெட்டுகளுடன் உள்ளார். இதற்கிடையே, ஜடேஜா சமீபத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில், ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இப்போட்டியில் அவர் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி, இர்பான் பதானை (22 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளினார்.