கபில்தேவின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா வியாழக்கிழமை (ஜூலை 27) நடந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கபில்தேவின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். மேலும், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ள கர்ட்னி வால்ஷ் சாதனையையும் சமன் செய்துள்ளார். இந்த போட்டி தொடங்கும் 41 விக்கெட்டுகளுடன், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் அனில் கும்ப்ளேவுடன் மூன்றாவது இடத்தில் இருந்தார். தற்போது, ஜடேஜா 44 விக்கெட்டுகளுடன், கர்ட்னி வால்ஷ்ஷுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், 43 விக்கெட்டுகளுடன் கபில்தேவ் இரண்டாம் இடத்திலும், அனில் கும்ப்ளே மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
வெளிநாட்டில் 50 விக்கெட்டுகள் மைல்ஸ்டோனை நெருங்கியுள்ள ஜடேஜா
ஜடேஜா தனது பந்துவீச்சைத் தவிர, அவரது பேட்டிங் திறமைக்கும் பெயர் பெற்றவர் ஆவார். ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டர் செயல்திறனில், வெளிநாட்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,000 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகள் எடுத்த கபில்தேவின் மற்றொரு சாதனையையும் விரைவில் சமன் செய்யும் முனைப்பில் ஜடேஜா உள்ளார். பேட்டிங்கை பொறுத்தவரை, ஜடேஜா ஏற்கனவே 1,125 ரன்களை வெளிநாட்டில் நடித்துள்ள நிலையில், 50 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்ட இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது. தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலேயே இந்த மைல்கல்லை ஜடேஜா எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.