
"அவுட் ஆயிட்டியே அப்பா" : தேம்பித் தேம்பி அழுத அஸ்வின் மகள்! வைரலாகும் காணொளி!
செய்தி முன்னோட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் (ஆர்ஆர்) ஆல்-ரவுண்டர் அஸ்வின் ரவிச்சந்திரன் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்களில் அவுட்டானார்.
துருவ் ஜூரல் ஆட்டமிழந்த பிறகு, போட்டியின் 19வது ஓவரில் களமிறங்கிய அஸ்வின் ரவிச்சந்திரன் முதல் இரண்டு பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை அடித்து ஆட்டத்தை தனது அணிக்கு சாதகமாக மாற்றினார்.
போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அஸ்வின் மகள், முகமது ஷமியின் பந்துவீச்சை தனது தந்தை அடித்து நொறுக்கியதைக் கண்டு பரவசமடைந்தார்.
ஆனால், அடுத்த பந்திலேயே அவர் அவுட்டானதால் மனம் உடைந்து கதறி கதறி அழுதார்.
அஸ்வினின் மனைவி ப்ரீத்தி நாராயணன் இந்த காணொளியை வெளியிட அது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் காணொளி
R Ashwin took his daughter on an emotional rollercoaster last night 😅
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 17, 2023
(📹 courtesy: Prithi Narayanan/IG)#IPL2023 #GTvRR pic.twitter.com/76jr34LeIP