தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பும் ரோஹித் ஷர்மாவுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023ல் ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு ஒரு சுவாரஸ்யமான ஆலோசனையைப் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து பட்டங்களை வென்றுள்ளார்.
எனினும் ஐபிஎல்லின் கடந்த இரண்டு சீசன்களில் ரோஹித் பேட்டிங் ஃபார்மிற்காக போராடி வருகிறார்.
'தி ஹிட்மேன்' என்ற புனைப்பெயர் கொண்ட ரோஹித், ஐபிஎல் 2022 இல் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய ஐபிஎல் 2023 இல் இதுவரை ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ள ரோஹித் 11 போட்டிகளில் 191 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
former indian coach advises rohit
ரவி சாஸ்திரி ரோஹித் ஷர்மாவுக்கு கொடுத்த அட்வைஸ் என்ன?
ஐபிஎல் 2023 இல் ரோஹித் ஷர்மாவின் மோசமான பேட்டிங் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் சாஸ்திரி, ரோஹித்தின் ஷாட் தேர்வு சரியாக இல்லை என்று கூறினார்.
ஷாட்களை தேர்ந்தெடுப்பதில் ரோஹித் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், சிறிது நிதானத்துடன் ஷாட்களை கையாண்டால், அவரது தவறை அவரே சரிசெய்து கொள்ள முடியும் என்றும் ரவி சாஸ்திரி கூறினார்.
இதற்கிடையே செவ்வாயன்று (மே 9) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 8 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
238 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் இதுவரை 6,070 ரன்கள் குவித்துள்ளார்.