ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்!
88வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டி நாடு முழுவதும் 14 நகரங்களில் தொடங்கி இருக்கிறது. இந்தப் போட்டியில் தமிழகம் உட்பட மொத்தம் 38 அணிகள் களமிறங்குகின்றன. இதில் எலைட் (4), பிளேட் (1) என்று இரு பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு எலைட் பிரிவிலும் தலா 8 அணிகளும், பிளேட் பிரிவில் 6 அணிகளும் இடம் பெற்றுள்ளன. எலைட் பிரிவில் வெற்றிபெறும் முதல் இரண்டு அணிகள் ஒரு லீக் கட்டத்திற்கு பிறகு காலிறுதி போட்டியில் கலந்துகொள்ளும். பிளேட் பிரிவில் இருக்கும் ஒவ்வொரு அணியும் மற்ற ஐந்து அணிகளுடன் மோதும். வெற்றி பெரும் முதல் நான்கு அணிகள் அரையிறுதியில் கலந்துகொள்வதற்குத் தகுதி பெறும்.
தமிழக அணியின் விவரங்கள்
தமிழக அணி பி பிரிவிலும் புதுச்சேரி அணி சி பிரிவிலும் கலந்துகொள்ள இருக்கின்றன. ஆந்திரா, ஐதராபாத், மும்பை, மகாராஷ்டிரா, டெல்லி, அசாம், சவுராஷ்டிரா ஆகிய அணிகளுடன் தமிழக அணி போட்டியிட இருக்கிறது. விளையாட்டின் முக்கிய தேதிகள் இதோ: லீக் சுற்று ஆட்டங்கள்- டிச.13 - ஜன.27 காலிறுதி ஆட்டங்கள்- ஜன.31 -பிப்.4 அரையிறுதி ஆட்டங்கள்- பிப்.8 - பிப்.12 இறுதிச்சுற்று ஆட்டங்கள்- பிப்.16 - பிப்.20 மேலும், தமிழக அணியின் சார்பாக இந்திரஜித் (கேப்டன்), சாய்கிஷோர் (துணை கேப்டன்), அஜித் ராம், அஸ்வின் கிறிஸ்ட், என்.எஸ்.சதுர்வேத், அபராஜித், நாராயண் ஜெகதீசன், விஜய் ஷங்கர், எல்.விக்னேஷ், ஆர்.கவின், சாய் சுதர்சன், பிரதோஷ் ரஞ்சல் பால், அஃபான் காதர், எச்.திரிலோக், சந்தீப் வாரியர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்,