Page Loader
29 வயதில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் ஓய்வு அறிவிப்பு
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் ஓய்வு அறிவிப்பு

29 வயதில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் ஓய்வு அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2024
03:53 pm

செய்தி முன்னோட்டம்

மகளிர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால், தனது 29 வயதில் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 254 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 205 கோல்கள் அடித்துள்ள ராணி ராம்பால், 2008இல் 14 வயதில் இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கினார். இந்திய ஹாக்கியில் முக்கியப் பங்காற்றி அவர், டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் அணி நான்காவது இடம்பிடித்ததில் முக்கிய பங்கு வகித்தார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய ராம்பால், "நான் இந்தியாவுக்காக இவ்வளவு காலம் விளையாடுவேன் என்று நான் நினைக்கவில்லை. சிறுவயதிலிருந்தே நான் நிறைய வறுமையைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் எனது கவனம் எப்போதும் இருந்தது." என்று கூறினார்.

ஹாக்கி லீக்

மகளிர் ஹாக்கி இந்தியா லீக்கில் வழிகாட்டி

தனது நீண்ட கால ஹாக்கி வாழ்க்கையில், அவர் 2020இல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா மற்றும் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் கௌரவமான பத்மஸ்ரீ உட்பட பல பாராட்டுகளைப் பெற்றார். வரவிருக்கும் மகளிர் ஹாக்கி இந்தியா லீக்கில் சூர்மாவுடன் வழிகாட்டியாக தனது புதிய பாத்திரத்தில் கவனம் செலுத்தியுள்ளார். தனது புதிய பொறுப்பைப் பற்றி பேசுகையில், இளம் வீரர்களை வழிநடத்துவதில் உற்சாகத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினார். "நான் விளையாட்டில் தொடர்ந்து இணைந்திருக்கவும், வளர்ந்து வரும் வீரர்களுக்கு உதவவும் விரும்புகிறேன், குறிப்பாக அவர்கள் வெற்றிபெறத் தேவையான மன ஆதரவை கொடுக்க விரும்புகிறேன்." என்று அவர் கூறினார். அடுத்த தலைமுறை வீராங்கனைகளுக்கு தனது நுண்ணறிவையும், ஆதரவையும் வழங்க முனைப்புட உள்ளார்.