வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை! ட்வீட் போட்ட ஆர்சிபி வீரர் ரஜத் படிதார்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) பேட்டர் ரஜத் படிதார் காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து படிதார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டதோடு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஐபிஎல் சீசனில் எட்டு இன்னிங்ஸ்களில் பெங்களூரு அணிக்காக படிதார் 55.50 சராசரியில் 333 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் காயத்திலிருந்து மீளத் தவறியதால், ஐபிஎல்லில் இருந்து வெளியேற்றப்பட்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். ஆர்சிபி அணியில் படிதாருக்கு பதிலாக வைஷாக் விஜய் குமார் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஆர்சிபி அடுத்த போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ள உள்ளது.