LOADING...
அவுட்டா? இல்லையா? ரஜத் படிதாருக்கு அவுட் கொடுத்த நடுவரின் முடிவால் சலசலப்பு; வைரலாகும் சர்ச்சை கேட்ச்
ரஜத் படிதார் விக்கெட் சர்ச்சையின் பின்னணி

அவுட்டா? இல்லையா? ரஜத் படிதாருக்கு அவுட் கொடுத்த நடுவரின் முடிவால் சலசலப்பு; வைரலாகும் சர்ச்சை கேட்ச்

எழுதியவர் Sekar Chinnappan
May 01, 2026
07:30 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரின் 42வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) கேப்டன் ரஜத் பாட்டிதார் ஆட்டமிழந்த விதம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஷத் கான் வீசிய எட்டாவது ஓவரில், பாட்டிதார் அடித்த பந்தை டீப் பேக்வார்ட் ஸ்கொயர் லெக் திசையில் ஜேசன் ஹோல்டர் டைவ் அடித்துப் பிடித்தார். ஹோல்டர் கேட்ச் பிடிக்கும்போது பந்து தரையில் பட்டது போலத் தெரிந்ததால், இது முறையான கேட்ச் தானா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. மைதானத்தில் இருந்த விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஆகியோர் இது குறித்து நான்காவது நடுவரிடம் தீவிரமாக விவாதிப்பதைக் காண முடிந்தது.

மூன்றாம் நடுவர்

மூன்றாவது நடுவர் வழங்கிய தீர்ப்பு மற்றும் அதன் தாக்கம்

ஆன்-ஃபீல்ட் நடுவர்கள் இந்த முடிவை மூன்றாவது நடுவர் அபிஜித் பட்டாச்சார்யாவிற்கு மாற்றினர். ரீப்ளேக்களைப் பலமுறை ஆய்வு செய்த நடுவர், இறுதியில் அது முறையான கேட்ச் தான் என அறிவித்து 'அவுட்' கொடுத்தார். இந்த விக்கெட் ஆர்சிபி அணியின் சரிவிற்கு ஒரு முக்கியத் தொடக்கமாக அமைந்தது, இறுதியில் அந்த அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பந்து தரையில் பட்டது போலத் தோன்றினாலும், ஹோல்டரின் கைகள் பந்திற்கும் தரைக்கும் இடையில் இருந்ததாக நடுவர் கருதினார்.

கிரிக்கெட் விதி

கிரிக்கெட் விதி 33.2.2 விளக்கும் உண்மை நிலை

சர்ச்சைக்குரிய கேட்ச்கள் குறித்து மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் (MCC) விதி 33.2.2 மிகத் தெளிவாக விளக்குகிறது. அந்த விதியின்படி, "ஒரு பீல்டர் பந்தைப் பிடித்திருக்கும்போது, அவரது கைகள் தரையில் பட்டாலும் அல்லது பந்து அவரது உடலில் அணைக்கப்பட்டிருந்தாலும் அது முறையான கேட்ச் எனக் கருதப்படும்". அதாவது, பந்து தரையைத் தொடுவதற்கு முன்னதாக பீல்டரின் கை பந்தின் கீழே இருந்தால், அது அவுட் என்றே அறிவிக்கப்படும். ஹோல்டரின் விஷயத்தில், அவரது விரல்கள் பந்தை முழுமையாகச் சூழ்ந்திருந்ததால், பந்து நேரடியாகத் தரையில் பட்டதற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று நடுவர் முடிவெடுத்தார்.

Advertisement

விளக்கம்

அஸ்வின் வழங்கிய தொழில்நுட்ப விளக்கம்

இந்திய வீரர் ஆர். அஸ்வின் தனது யூடியூப் சேனலில் இந்தத் தீர்ப்பு சரியானது என்பதற்கான காரணத்தை விளக்கினார். ஜேசன் ஹோல்டரின் கைகள் மிகவும் பெரியவை என்பதால், பந்து அவரது கைகளுக்குள் மறைந்துவிடும் என்றும், விரல்களுக்கு இடையே இடைவெளி தெரிந்தால் மட்டுமே பந்து தரையில் பட்டதாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நடுநிலையான பார்வையில் இது முற்றிலும் சரியான கேட்ச் என்று குறிப்பிட்ட அஸ்வின், அனுபவம் வாய்ந்த மூன்றாவது நடுவரின் முடிவை நாம் மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement