
INDvsPAK: இன்றும் மழையால் தடைப்பட்ட ஆட்டம், இன்றும் போட்டி ரத்தாகுமா?
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
குழுச் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆடிய போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றும் போட்டியின் போது மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைப்பட்டிருக்கிறது.
போட்டி நடைபெறும் கொழும்பு மைதானத்தில் கனமழை பெய்து வருகிறது. இன்றைக்குள் போட்டியை முடிக்கவே நடுவர்கள் முயற்சிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. எனினும், 20 ஓவர்களுக்கும் குறைவாக போட்டியை தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், போட்டியை நாளை தொடரவும் வாய்ப்புகள் இருக்கிறது.
மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் இருந்ததன் காரணமாக, இந்தப் போட்டிக்கு செப்டம்பர் 11 ரிசர்வ் நாளாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. போட்டியை அப்படியே நாளை தொடர்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
மழையால் தடைப்பட்ட போட்டி:
I guess It won't stop. It's just not rain. it's a heavy storm at Colombo. It's 60 to 70% tomorrow for Reserve Day, too.#INDvsPAK #AsiaCup2023 @shakilsh58 @kasif15 @ImArslanSherazi @AhmadNawaz93 @mir_sana05 pic.twitter.com/arRlfUzedz
— Syed Muhammad Owais (@smowaiscricket) September 10, 2023