பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டே தொடர்வார்; பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் அதன் துணைப் பணியாளர்கள் பற்றிய அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் தொடர உள்ள நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹ்மாப்ரே மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் ஆகியோரின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டிராவிட் நீட்டிப்பைப் பெற விரும்பவில்லை என்று பல செய்திகள் வந்த நிலையில், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று ராகுல் டிராவிட் மனம் மாறி ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், ராகுல் டிராவிட் எவ்வளவு காலத்திற்கு பயிற்சியாளராக இருப்பார் என பிசிசிஐ அறிக்கையில் கூறப்படாத நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை வரை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.