நார்வே செஸ்: மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி கிளாசிக்கல் சதுரங்கத்தில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா
18 வயதான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, மே 29 புதன்கிழமை ஸ்டாவஞ்சரில் நடந்த நார்வே செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து தனது முதல் கிளாசிக்கல் செஸ் வெற்றியைப் பதிவு செய்தார். கார்ல்சனின் சொந்த ஊரில் அவரை தோற்கடித்த பெருமையை பெற்றார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டியில் மூன்றாவது சுற்றின் முடிவில் ஆர் பிரக்ஞானந்தா 9 புள்ளிகளில் 5.5 புள்ளிகளைப் பெற்றார். இதற்கிடையில், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியோ கருவானா மூன்று முழு புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சுவாரசியமாக, பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர் வைஷாலி, நார்வே செஸ் பெண்கள் பிரிவில் தனது முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
கிளாசிக்கல் சதுரங்கத்தில் பிரக்னாநந்தா வெற்றி
#SportsUpdate | மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா#SunNews | #NorwayChess | #Praggnanandhaa | #MagnusCarlsen | @rpraggnachess pic.twitter.com/oI0tsYQurM— Sun News (@sunnewstamil) May 30, 2024