டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர்! அஸ்வின் சாதனை!
செய்தி முன்னோட்டம்
நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியின் முதல் நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 450 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அலெக்ஸ் கேரியை வீழ்த்தி தனது முதல் விக்கெட்டை எடுத்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
மேலும் ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் வரலாற்றில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது பந்துவீச்சாளர் ஆவார்.
டெஸ்ட் விக்கெட்டுகள் அடிப்படையில் அஸ்வின் தற்போது 452 விக்கெட்களுடன் ஆஸ்திரேலியாவின் நாதன் லியானுக்கு (460 விக்கெட்டுகள்) அடுத்த இடத்தில் உள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
கிரிக்கெட்டில் அஸ்வினின் செயல்திறன்
2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அஸ்வின், இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகரமான ஆஃப் ஸ்பின்னராக உள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தனஞ்சய டி சில்வாவை வெளியேற்றியதன் மூலம், அஸ்வின் விக்கெட்கள் அடிப்படையில் ரிச்சர்ட் ஹாட்லியை (431) விஞ்சினார்.
மேலும் ஒரு நாள் கழித்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவை (434) அஸ்வின் பின்னுக்குத் தள்ளினார்.
அஸ்வின் இப்போது டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பவான் கும்ப்ளேவுக்கு (619) அடுத்த இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய கும்ப்ளேவுக்கு (35) நிகராக அஸ்வினும் 30 முறை ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.