ஐபிஎல் ஏலத்தில் தவறான வீரரை வாங்கியது குறித்து விளக்கமளித்த பஞ்சாப் கிங்ஸ்
உலகின் பணம் கொழிக்கும் முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் ஏலம் துபாயில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிவடைந்தது. அந்த ஏலத்தில் பல்வேறு அணிகள் பல கோடுகளுக்கு வீரர்களை வாங்கிக் குவித்தனர். ஐபிஎல் அணிகளுள் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணியானது, ஏலத்தின் இறுதிச் சுற்றுகளில் தேசிய அணிக்காக விளையாடாத பல்வேறு இளம் இந்திய வீரர்களை வாங்கிக் குவித்தது. அப்படி வாங்கும் போது, சஷாங்க் சிங் என் 32 வயது பேட்டரையும் 20 கோடி என்ற அடிப்படை விலையில் வாங்கியது பஞ்சாப். ஆனால், வாங்கிய சில நிமிடங்களிலேயே, தாங்கள் வாங்க நினைத்த வீரர் இவர் இல்லை எனவும், அதனை மாற்றிக் கொள்ள முடியுமா எனவும் பஞ்சாப் அணி கேட்டுக் கொண்டது சர்ச்சையானது.
பஞ்சாப் அணி விளக்கம்:
அந்தக் குறிப்பிட்ட வீரருக்கான ஏலம் நிறைவடைந்துவிட்ட படியால், ஏலத்தை மாற்ற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப் அணியின் இந்த நடவடிக்கை இணையத்தில் வெகுவாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், தங்களுடைய நடவடிக்கை குறித்து விளக்கமளித்திருக்கிறது பஞ்சாப் அணி. அதன்படி, சஷாங்க் சிங் என்ற 19 வயது இளம் வீரரை வாங்கவே தாங்கள் திட்டமிட்டதாகவும், அதே பெயரில் இருந்த வேறு ஒரு வீரரை தவறாக வாங்கி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், புதிதாக வந்த வீரரையும் தாங்கள் வரவேற்பதாகத் தெரிவித்திருக்கிறது பஞ்சாப் அணி. இந்த ஐபிஎல் ஏலத்தில் ஹர்ஷல் படேல், ரைலி ரூசௌவ் மற்றும் கிரிஸ் வோக்ஸ் உள்ளிட்ட வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.