ஐபிஎல் 2026: 93 ரன்கள் குவித்து அசத்தல்.. லக்னோவை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற பிரியான்ஷ் ஆர்யா
செய்தி முன்னோட்டம்
முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 29வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) தனது வெற்றிப்பயணத்தைத் தொடர்கிறது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோரான 254/7 ரன்களைக் குவித்து லக்னோவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது. லக்னோ அணி தனது இலக்கை அடையப் போராடினாலும், 20 ஓவர்களில் 200/5 ரன்களை மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. சிறப்பான பேட்டிங்கிற்காக, பிரியான்ஷ் ஆர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ரன் மழை
பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானொல்லியின் ரன் மழை
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானொல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப் ஆகும். இவர்கள் இருவரும் இணைந்து 80 பந்துகளில் 182 ரன்களைக் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணிக்கான மூன்றாவது மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் சாதனையைப் படைத்தனர். பிரியான்ஷ் ஆர்யா 37 பந்துகளில் 93 ரன்கள் (4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்) மற்றும் கூப்பர் கானொல்லி 46 பந்துகளில் 87 ரன்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) குவித்ததனர்.
லக்னோ தோல்வி
லக்னோவின் தோல்விக்குக் காரணங்கள்
255 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ரிஷப் பண்ட் (43 ரன்கள்) மற்றும் மிட்செல் மார்ஷ் (40 ரன்கள்) தலா 40 ரன்களைக் கடந்தும், பஞ்சாப் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். பஞ்சாப் பந்துவீச்சாளர்களில் மார்கோ ஜான்சன் (2/37) சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
புள்ளிப்பட்டியல்
புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸின் ஆதிக்கம்
இந்த வெற்றியின் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றுகூட தோல்வியடையாமல், முதலிடத்தில் நீடிக்கிறது. தொடர் வெற்றிகளுடன் பிளே-ஆஃப் சுற்றை நோக்கிப் பஞ்சாப் கிங்ஸ் அணி மிக வலுவாக நடைபோட்டு வருகிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தோல்வியின் காரணமாகப் புள்ளிப் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.