
64 வயதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகம்; யார் இந்த ஜோனா சைல்ட்?
செய்தி முன்னோட்டம்
போர்ச்சுகலின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஜோனா சைல்ட், 64 வயதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி வரலாறு படைத்துள்ளார்.
சர்வதேச டி20 வரலாற்றில் இரண்டாவது வயதான அறிமுக வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
மேலும், அவர் முந்தைய சாதனையாளர்களான பால்க்லேண்ட் தீவுகளின் ஆண்ட்ரூ பிரவுன்லீ மற்றும் கேமன் தீவுகளின் மாலி மூரை முறியடித்தார்.
இந்த பட்டியலில் கிட்டத்தட்ட 67 வயதில் அறிமுகமான ஜிப்ரால்டரின் சாலி பார்டன் தற்போது முதலிடத்தில் உள்ளார்.
நார்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் போது ஜோனா சைல்ட் அறிமுகமானார்.
இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் பேட்டிங் செய்த சைல்ட், இரண்டு ரன்கள் எடுத்தார். மேலும், இரண்டாவது போட்டியில் நான்கு பந்துகளை மட்டும் வீசினார்.
கலவை
இளமை மற்றும் முதுமை என புதிய காம்போவுடன் களமிறங்கிய போர்ச்சுகல்
இவ்வளவு வயதான காலத்தில் அவரது தேர்வு பரவலாக பாராட்டப்பட்டது. மேலும், அணியின் கேப்டனான 44 வயதான சாரா ஃபூ-ரைலாண்டோ, ஜோனாவை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஒரு உத்வேகம் என்று அழைத்தார்.
இதற்கிடையே, போர்ச்சுகல் மகளிர் கிரிக்கெட் அணி பல்வேறு தலைமுறைகளைக் கொண்டு பன்முகத்தன்மையுடன் இருந்தது.
அதாவது, இந்த அணியில் வயதானவர்கள் ஒருபுறம் இருக்க, 15 வயது இஷ்ரீத் சீமா மற்றும் 16 வயது மரியம் வசீம் மற்றும் அஃப்ஷீன் அகமது ஆகிய மூன்று டீனேஜ் வீராங்கனைகளும் இடம் பெற்றிருந்தனர்.
வயது வித்தியாசத்தில் கவனம் பெற்றது மட்டுமல்லாமல், போர்ச்சுகல் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-1 என கைப்பற்றியது.