Page Loader
கேலோ இந்தியா: ஜன.,19ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
கேலோ இந்தியா போட்டிகளை துவக்க, தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

கேலோ இந்தியா: ஜன.,19ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

எழுதியவர் Venkatalakshmi V
Jan 17, 2024
09:41 am

செய்தி முன்னோட்டம்

இந்தாண்டு, கேலோ இந்தியா போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை துவக்கி வைக்க, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் பிரதமர் மோடி. வரும் ஜனவரி 19ஆம் தேதி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார். கேலோ இந்தியா என்ற பெயரில் நாடு முழுவதும் இருந்து அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான போட்டிகள் தமிழகத்தில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடக்க உள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இந்தப் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 4ஆம் தேதி அமைச்சர் உதயநிதி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

அமைச்சர் உதயநிதி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்