உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் வெற்றி: அர்ஜுன் எரிகைசி மற்றும் கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
தோஹாவில் நடைபெற்ற FIDE உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில், செஸ் விளையாட்டில் அர்ஜுன் எரிகைசி மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோர் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டியுள்ளார். அவர்களின் இந்தச் சாதனை இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும், எதிர்காலப் போட்டிகளிலும் அவர்கள் மேலும் பல வெற்றிகளைக் குவிக்கத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதனை
வீரர்களின் சாதனை
இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, ஓபன் பிரிவில் உலகின் டாப் வீரர்களுடன் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். சமீபகாலமாகச் சர்வதேச செஸ் தரவரிசையில் அவர் பெற்று வரும் அபார வளர்ச்சி, இந்தியாவின் அடுத்த தலைமுறை செஸ் நட்சத்திரமாக அவரை அடையாளப்படுத்துகிறது. மகளிர் பிரிவில் இந்தியாவின் அனுபவம் வாய்ந்த வீராங்கனையான கோனேரு ஹம்பி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். ஏற்கனவே பலமுறை உலக அளவில் பதக்கங்களை வென்றுள்ள ஹம்பி, இந்த செஸ் போட்டியிலும் தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.