
டுவைன் பிராவோ முதல் அக்சர் படேல் வரை; ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு போட்டியில் கேப்டனாக செயல்பட்ட வீரர்கள்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2024 இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு கடைசி போட்டிக்குப் பிறகு ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில், அணியின் வழக்கமான கேப்டன் இல்லாத நிலையில், ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஐபிஎல் வீரர்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.
டுவைன் பிராவோ
டுவைன் பிராவோ - மும்பை இந்தியன்ஸ் (2010)
சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரராக நீண்ட காலம் திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, 2010 இல் மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரு போட்டிக்கு மட்டும் வழிநடத்தினார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மும்பை இந்தியன்ஸ் அந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோல்வியடைந்ததால் அவரது கேப்டன் பதவி அறிமுகம் தோல்வியில் முடிந்தது.
மணிஷ் பாண்டே
மணிஷ் பாண்டே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2021)
2021 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மணிஷ் பாண்டே ஒரே ஒரு போட்டியில் தலைமை தாங்கினார்.
அப்போது அணியின் வழக்கமான கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் துணை கேப்டன் புவனேஷ்வர் குமார் இருவரும் இல்லாததால், மூத்த வீரர் மணீஷ் பாண்டே தலைமையேற்றார்.
அவரது தலைமையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் அந்த போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.
பார்த்திவ் படேல்
பார்த்திவ் படேல் - கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)
2011 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்டர் பார்த்திவ் படேல் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை ஒரே ஒரு போட்டியில் கேப்டனாக வழிநடத்தினார்.
இருப்பினும், அவரது தலைமை அணிக்கு வெற்றியை பெற்றுத் தர முடியவில்லை.
ரோஸ் டெய்லர்
ரோஸ் டெய்லர் - புனே வாரியர்ஸ் இந்தியா (2013)
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் 2013 சீசனில் ஒரு போட்டிக்கு புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு கேப்டனாக இருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் புனே வாரியர்ஸ் வெற்றி பெற்றதால் அவரது தலைமை போற்றும் வகையில் இருந்தது.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் - மும்பை இந்தியன்ஸ் (2023)
2023 சீசனில் ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரு போட்டிக்கு வழிநடத்தினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஜிதேஷ் சர்மா
ஜிதேஷ் சர்மா - பஞ்சாப் கிங்ஸ் (2024)
இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ஜிதேஷ் சர்மா 2024 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஒரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார்.
ஆனால், அவரது தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வெற்றியைப் பெற முடியவில்லை.
நிக்கோலஸ் பூரன்
நிக்கோலஸ் பூரன் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (2024)
2024 சீசனில் கே.எல்.ராகுல் இல்லாத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் நிக்கோலஸ் பூரன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ஒரு போட்டிக்கு தலைமை தாங்கினார்.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான அந்த போட்டியில், அணிக்கு எளிதாக வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
அக்சர் படேல்
அக்சர் படேல் - டெல்லி கேப்பிடல்ஸ் (2024)
2025 ஆம் ஆண்டு அக்சர் படேல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே, முந்தைய ஐபிஎல் 2024 சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அவர் அணியை வழிநடத்தினார்.
அந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியடைந்தது.