LOADING...
யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் : அபார சாதனை படைத்த மான்செஸ்டர் சிட்டி மேலாளர்
யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி மேலாளர் பெப் கார்டியோலா சாதனை

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் : அபார சாதனை படைத்த மான்செஸ்டர் சிட்டி மேலாளர்

எழுதியவர் Sekar Chinnappan
May 18, 2023
07:21 pm

செய்தி முன்னோட்டம்

மான்செஸ்டர் சிட்டியின் மேலாளர் பெப் கார்டியோலா யுஇஎப்ஏ கால்பந்து சாம்பியன்ஸ் லீக்கில் அதிவேகமாக 100 வெற்றிகளைப் பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார். எதிஹாட்டில் நடந்த அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது லெக் மோதலில் ரியல் மாட்ரிட் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அவர் இந்த சாதனையைப் படைத்தார்.

Pep Guardiola numbers

மேலாளர் பெப் கார்டியோலா புள்ளிவிபரங்கள்

பெப் கார்டியோலா யுஇஎப்ஏ சாம்பியன்ஷிப் லீக்கில் 160 போட்டிகளில் 100 வெற்றிகளை பெற்று, மிகக் குறைவான ஆட்டங்களில் 100 வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக, 180 ஆட்டங்களில் 100 வெற்றிகளைப் பெற்ற கார்லோ அன்செலோட்டி இந்த சாதனையை தக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக சர் அலெக்ஸ் பெர்குசன் 184 போட்டிகளில் 100 வெற்றிகளை பெற்றுள்ளார். இதற்கிடையே பிரீமியர் லீக்கில் 134 போட்டிகளில் 100 வெற்றிகளை எட்டி, மிகக்குறைந்த பிரீமியர் லீக் போட்டிகளில் 100 வெற்றிகள் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கார்டியோலா தற்போது யுஇஎப்ஏ சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை தனது நான்காவது ஐரோப்பிய கோப்பை/சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை அடைந்துள்ளார்.